பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமன்னா, ஹன்சிகா, காஜல்அகர்வால் வரிசையில் மும்பையில் இருந்து தமிழுக்கு வந்த நடிகை சிருஷ்டி டான்கே. அவர்களெல்லாம் இந்தியில் சில படங்களில் நடித்து விட்டுத்தான் தமிழுக்கே வந்தனர். ஆனால இவரோ, காதலாகி என்ற தமிழ்ப்படத்தில்தான் அறிமுகமானார். அதையடுத்து யுத்தம் செய், மேகா, டார்லிங், கத்துக்கட்டி, வில்அம்பு, ஜித்தன்-2 என பத்து படங்களுக்கு மேல் நடித்து விட்டார். நவரச திலகம், ஒரு நொடியில், அச்சமின்றி, காலகூத்து, தர்மதுரை ஆகிய படங்களில் தற்போது நடித்துள்ளார்.
மேலும், வந்த வேகத்தில் பல படங்களில் சிருஷ்டி டான்கே நடித்து விட்டபோதும், இதுவரை அவர் நடித்த ஒரு படம்கூட ஹிட்டாகவில்லை. அதனால் ஆரம்பத்தில் தமிழ் சினிமா மீது நிறைய நம்பிக்கை வைத்திருந்த அவர், தற்போது நம்பிக்கையை இழந்து காணப்படுகிறார். அதேசமயம், விஜயசேதுபதியுடன் நடித்துள்ள தர்மதுரை படத்தின் மீது சிறிது நம்பிக்கை வைத்திருந்தபோதும் அந்த படத்தில் தமன்னாவே நாயகி என்பதால் அந்த படம் குறித்து பெரிதாக பேசிக்கொள்வதில்லை சிருஷ்டி டான்கே.
அதோடு, தமிழில் ஒரு நிலையான இடத்தை பிடித்து விட வேண்டும் என்பதற்காக கோலிவுட்டில் முகாமிட்டிருந்த அவர், தற்போது மும்பைக்கே திரும்பிச்சென்று விட்டார். அங்கிருந்தபடி தாய்மொழியான இந்தி படங்களை கைப்பற்ற தீவிரமான முயற்சியிலும் இறங்கியிருக்கிறாராம் சிருஷ்டி டான்கே.