மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
வெங்கட் பிரபு இயக்கிய பல படங்கள் வெளிநாட்டுப்படங்களின் டிவிடிக்களிலிருந்து சுடப்பட்ட கதைகள்தான். அப்படியும் கூட அவரால் தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுக்க முடியவில்லை. வரிசையாக தோல்விப்படங்களை இயக்கியதால் தயாரிப்பாளர்கள் மற்றும் முன்னணி ஹீரோக்களின் ஆதரவை இழந்த வெங்கட்பிரபு, வேறு வழியில்லாமல் சொந்தப்படம் எடுக்கிறார்.
வெங்கட் பிரபு இயக்கிய முதல் படமான 'சென்னை-600028' படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதே நேரத்தில் அவர் இயக்கிய 'சரோஜா' படத்தி இரண்டாம் பாகாவும் உருவாகவிருக்கிறது. 'அம்மா கிரியேஷன்ஸ்' டி.சிவா தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் 2008-ல் வெளியான காமெடி த்ரில்லர் படம் 'சரோஜா'. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை வெங்கட்பிரபு இயக்கவில்லை.
'மங்காத்தா' படத்தில் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த ஏ.ஜெ.ஸ்கந்த ப்ரியன் என்பவர் இப்படத்தை இயக்கவிருக்கிறார். சரோஜாவிற்கு இசை அமைத்த யுவன் சங்கர் ராஜாவும், படத்தொகுப்பு செய்த பிரவீனும் இப்படத்திலும் இணையவிருக்கின்றனர். இப்படத்தின் கதையை சமரன் எழுத, ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் சம்பந்தமான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.