‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
அழகும் திறமையும் இருந்தும் க்ளிக்காகாமல் போன நடிகைகளில் ஆண்ட்ரியாவும் ஒருவர். அவரை படங்களில் புக் பண்ண நினைத்தால் யாரை அணுகுவது என்று திரையுலகினருக்கே தெரியாது. அந்தளவுக்கு மர்மமானவர் ஆண்ட்ரியா. அவருக்கு என்று பி.ஆர்.ஓ.வோ, மானேஜரோ கிடையாது. செல்போனில் தொடர்பு கொண்டாலும் எடுக்கமாட்டார். தனக்கு நெருக்கமான ஹீரோக்கள் உடன் மட்டுமே தொடர்பில் இருப்பார்.
இதுபோன்ற காரணங்களினால் தமிழில் மார்க்கெட்டை இழந்த ஆண்ட்ரியா, பட வாய்ப்பு இல்லாததினால் மும்பை, ஹைதராபாத், பெங்களூரு என்று ரவுண்ட் அடித்துக் கொண்டிருக்கிறார். பாண்டிராஜ் இயக்கும் 'இது நம்ம ஆளு' படத்தில் சிறு வேடத்தில் தலை காட்டியுள்ள ஆண்ட்ரியா, ராம் இயக்கும் 'தரமணி' படத்திலும் நடித்துள்ளார். அவரது போறாத நேரமோ என்னவோ....இந்த இரண்டு படங்களுமே ரிலீஸ் ஆகாமல் மாதக்கணக்கில் முடங்கிக் கிடக்கிறது.
இந்நிலையில் மலையாளத்தில் மம்முட்டியுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார் ஆண்ட்ரியா. ஏற்கெனவே ஃபஹத் ஃபாசில், பிருத்திவி ராஜ், மோகன்லால் ஆகியோருடன் இணைந்து மலையாள படங்களில் நடித்துள்ளார் ஆன்ட்ரியா. மம்முட்டியுடன் முதன் முதலாக இணைந்து நடிக்கும் படத்திற்கு 'தோப்பில் ஜோப்பன்' என்று பெயரிட்டுள்ளனர். ஜானி ஆன்டனி இப்படத்தை இயக்குகிறார்.