ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கார்த்தி, நாகர்ஜூனா, தமன்னா நடிப்பில் சமீபத்தில் தமிழில் 'தோழா' என்ற பெயரிலும், தெலுங்கில் 'ஊப்பரி' என்ற பெயரிலும் வெளிவந்து சூப்பர் ஹிட்டான படம் இது. பிரன்ஞ்சில் வெளிவந்த 'தி இன்டச்சபிள்ஸ்' என்ற படத்தின் ரீ-மேக் உரிமையை முறைப்படி வாங்கி படம் எடுத்தார்கள். வம்சி இயக்கியிருந்தார். இப்படம் இப்போது ஹிந்தியிலும் ரீ-மேக் ஆக இருக்கிறது. கரண் ஜோகர் இப்படத்திற்கான ரீ-மேக் உரிமையை வாங்கியிருக்கிறார். ஹிந்தியில் நாகர்ஜூனா ரோலில் அமிதாப் நடிக்க போவதாக கூறப்படுகிறது. இதனிடையே தோழாவில் தமன்னாவின் நடிப்பு கரண் ஜோகரை மிகவும் கவர்ந்துவிட்டதாம். இதனால் அவரையே ஹிந்தி ரீ-மேக்கிலும் நடிக்க வைக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.