திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் அக்கா மகன் தான் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார். அந்த வகையில், அவர் சிறுவராக இருந்தபோதே ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த காதலன், பம்பாய் உள்ளிட்ட பல படங்களில் குழந்தை குரலில் பாடியிருந்தார். ஆக, ஏ.ஆர்.ரகுமானின் அரவணைப்பிலேயே வளர்ந்து வந்த ஜி.வி.பிரகாஷ்குமார் வெயில் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி குறுகிய காலத்தில் 50 படங்களுக்கு இசையமைத்து சாதனை புரிந்து விட்டார். அதோடு, விஜய், பாலா போன்ற முன்னணி கலைஞர்களின் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளர் வரிசையில் இடம்பிடித்திருக்கிறார்.
அதோடு, டார்லிங் படத்தில் ஹீரோவாக அரிதாரம் பூசிய அவர், திரிஷா இல்லன்னா நயன்தாராவுக்கு பிறகு குறிப்பிடத்தக்க ஹீரோவாகி விட்டார். தற்போது அவர் பல படங்களில் ஹீரோவாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில், இதுவரை ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் அனைத்து படங்களுக்கும் அவரே இசையமைத்து வந்த நிலையில், முதல்முறையாக மின்சார கனவு ராஜீ வ்மேனன் இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். அதையடுத்து சமீபத்தில் இரண்டு பாடல்களுக்கான கம்போஸிங் முடிந்துள்ளதாம். அதை கேட்டு மகிழ்ந்த ஜி.வி.பிரகாஷ்குமார், அந்த இரண்டு பாடல்களையும் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் எனக்கு கொடுத்த சிறந்த பரிசுகளாக நினைக்கிறேன் என்று கூறியிருப்பவர், அவரது பாடலுக்கு நான் நடிக்கப்போகும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.