கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
பிரம்மோற்சவம் எனும் குடும்ப பொழுபோக்கு திரைப்படத்தில் நடித்து வரும் மகேஷ் பாபு அப்படத்திற்கு பின்னர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கின்றார். இப்படத்தின் பூஜை மே 31 ஆம் தேதி நடைபெறும் என ஏற்கனவே கூறப்பட்டது. மகேஷ் பாபுவின் தந்தையும் டோலிவுட்டின் மூத்த நடிகருமான கிருஷ்ணாவின் பிறந்த நாளான மே 31 ஆம் தேதி மகேஷ் பாபு - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் படத்தின் பூஜை நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மகேஷ் பாபு நடிப்பில் இயக்குனர் ஸ்ரீகாந்த் அடல்லா இயக்கத்தில் உருவாகும் பிரம்மோற்சவம் மே மாதத்தில் திரைக்கு வரவுள்ளது. அம்மாத இறுதியிலேயே தனது அடுத்த படத்தினை துவக்க மகேஷ் பாபு முடிவு செய்துள்ளார்.