ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கடந்த 2014ல் மலையாளத்தில் வெளியான படம் தான் 'ஆங்ரி பேபீஸ் இன் லவ்'.. அனூப் மேனன் ஜோடியாக பாவனா நடித்திருந்தார். இன்றைய இளைஞர்களிடம் காதலுக்காக போராடும் குணம் இருக்கும் அளவுக்கு அதன் மூலம் கிடைத்த மண வாழ்க்கையை தக்கவைத்துக் கொள்ளும் பொறுமையும் புரிந்துணர்வும் இல்லை என்பதை இரண்டு மணிநேர காமெடி ட்ராமாவாக கலகலப்பாக சொல்லியிருந்தார்கள். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் ஹீரோ அனூப் மேனனும் பாவனாவும் சேர்ந்தே காமெடியையும் கவனித்துக்கொண்டதால் நகைச்சுவைக்கு என்று தனியாக காமெடி நடிகர்கள் யாரையும் சேர்க்கவில்லை.
அதைவிட பாவனாவிடம் இவ்வளவு நகைச்சுவை திறமையா..? தமிழ் இயக்குனர்கள் மிஸ் பண்ணிவிட்டார்களே என்கிற அளவுக்கு பீல் பண்ண வைத்தார் பாவனா.. இப்போது ஸ்பெஷல் நியூஸ் என்னவென்றால் மீண்டும் அனூப் மேனனும் பாவனாவும் இணைந்து ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்கள். இந்தப்படத்தில் மேஜர் கேசவ் என்கிற ராணுவ வீரர் கேரக்டரில் அனூப் மேனனும் பெர்ப்யூம் விற்பவராக பாவனாவும் நடிக்கின்றனர். கூடவே 'பிலிப்ஸ் அன்ட் தி மங்கி பென்' புகழ் மாஸ்டர் சனூப் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தை களவூர் ரவிகுமார் என்பவர் இயக்கி வருகிறார்.