தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மம்முட்டியை வைத்து 'துருப்பு குலான்', 'இ பட்டணத்தில் பூதம்' மற்றும் 'தப்பன்னா' என வரிசையாக மூன்று படங்களை இயக்கியவர் டைரக்டர் ஜானி ஆண்டனி. இவர்தான் 'மாஸ்டர்ஸ்' படம் மூலம் மலையாளத்தில் சசிக்குமாரை அறிமுகப்படுத்தியவர். இப்போது மம்முட்டியை வைத்து நான்காவது முறையாகவும் அவர் நடிக்கும் படத்தை இயக்குகிறார். படத்தின் பெயர் 'தோப்பில் ஜோப்பன்'.. இந்தப்படத்தில் மம்முட்டி கபடி வீரராக நடிக்கிறார். அதுமட்டுமல்ல, 'தோப்புரம்குடி கபடி குழு' என்கிற பெயரில் கபடி குழு ஒன்றையும் நடத்தி வரும் கேரக்டராம். இந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்று எர்ணாகுளத்தில் துவங்கியது.
இரண்டு வெவேறு காலகட்டங்களில் நிகழும் இந்த கதையில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். முதலில் அமலாபால் தன நடிப்பதாக சொல்லப்பட்டு வந்தது.. ஆனால் இப்போது அமலாபால் இல்லை. ஆண்ட்ரியா தான் நடிக்கிறார் என்பது உறுதியாகி உள்ளது. கடந்த வருடம் வெளியான 'லோஹம்' படத்தில் மோகன்லாலுடன் ஆண்ட்ரியா இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னொரு கதாநாயகியாக தீப்தி சதி நடிக்க இருக்கிறார் அவருடன் தேதிகள் குறித்த பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறதாம்.