Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இளையராஜாவைப் புறக்கணித்த மதன் கார்க்கி

21 ஏப், 2016 - 16:54 IST
எழுத்தின் அளவு:
Madhan-Karky-boycott-Ilayaraja

வைரமுத்துவின் மகனும் பாடலாசிரியருமான மதன் கார்க்கி 'டூப்பாடூ' என்ற இசை இணையதளத்தை நேற்று தொடங்கினார். தனிப் பாடல்களைப் உருவாக்கியவர்கள் அவர்களுடைய பாடல்களை இந்த இணையதளத்திற்கு அனுப்பினால், அது இணையதளத்தில் இடம் பெறும். புத்தம் புது இசைக் கலைஞர்களைத் தூக்கி நிறுத்தும் இணையதளமாக இது இருக்கும் என்று மதன் கார்க்கி தெரிவித்திருந்தார். அதே சமயம் மூத்த இசைக் கலைஞர்களுக்கான மரியாதையைக் கொடுக்க மதன் கார்க்கி தவறியுள்ளார்.


இந்த இணையதளத்தின் பின்னணியில் நகரும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படங்களில் தமிழ்த் திரையிசை உலகில் தனக்கென தனி இடத்தை வைத்துள்ள இளையராஜாவின் புகைப்படம் இல்லாதது அவருடைய ரசிகர்களிடமும், இசை ஆர்வலர்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


எம்.எஸ்.விஸ்வநாதன், ஏ.ஆர்.ரகுமான், ரகுநந்தன், இமான், சத்யா, அனிருத், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்களில் சிலரின் புகைப்படங்கள் மட்டுமே அதில் இடம் பெற்றுள்ளன. கே.வி.மகாதேவன், இளையராஜா உள்ளிட்ட பல முக்கிய இசையமைப்பாளர்களின் புகைப்படங்கள் அதில் இடம் பெறவில்லை.


இசைக்கான இணையதளம் என்றாலே அதில் இளையராஜா புகைப்படம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்றுதான் அனைத்து இசை ரசிகர்களும் எதிர்பார்ப்பார்கள். மதன் கார்க்கியின் அப்பா வைரமுத்துவும், இளையராஜாவின் மகன் யுவன்ஷங்கர் ராஜாவும் இரண்டு படங்களில் இணைந்து பணியாற்றிய பிறகு மதன் கார்க்கி, இன்றைய இளைஞர் போல் இல்லாமல் பழைய பகையை வளர்க்கும் ஒரு பாடலாசிரியாக இருக்கிறாரோ என சில இசை ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள். அந்த இணையதளத்தில் தன் சக போட்டியாளரான தாமரை புகைப்படத்தைத் தவிர மற்ற பாடலாசிரியர்களின் புகைப்படங்களையும் மதன் கார்க்கி கவனமாக தவிர்த்துள்ளார்.


ஒரு பொதுவான இசை இணையதளத்தில் இப்படி ஒரு பாகுபாடு இருக்கலாமா ?


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in