ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இது யதார்த்த சினிமாக்களின் காலம். காக்கா முட்டை படம் அதனை துவக்கி வைத்தது. சிறிய பட்ஜெட்டில் யதார்த்த சினிமாக்கள் உருவாகி வருகிறது. அந்த வரிசையில் உருவாகும் படம்தான் மானசி.
படத்தின் ஹீரோ ஆடு மேய்ப்பவன். ஆடுகளை தன் குடும்ப உறுப்பினராக நினைக்கிறவன். அவன் செல்லமாக வளர்க்கும் ஆடுதான் மானசி. அது ஒரு நாள் திடீரென காணாமல் போய்விடுகிறது. அதை அவன் தேடி அலைவதுதான் கதை. அப்படி தேடும்போது கிடைக்கிற காதலும், அனுபவங்களும்தான் திரைக்கதை.
ஆட்டுக்காரனாக புதுமுகம் நரேஷ்குமார் நடிக்கிறார், அவரது காதலியாக ஹாரிகாக நடிக்கிறார். இவர் மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகை. ஷிவ்ராம் இசை அமைக்கிறார், கண்ணன் பட்டேல் ஒளிப்பதிவு செய்கிறார். மலையாள இயக்குனர்களிடம் உதவியாளராக இருந்த நவாஸ் சுலைமான் இயக்குகிறார். தேனி, கம்பம், உத்தமபாளையும், போடி, கோம்பை பகுதிகளில் படம் உருவாகி வருகிறது.