ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கோலிவுட்டில் பிரபலமாக இருக்கும் வில்லன்களுள் ஜே.டி.சக்ரவர்த்தியும் ஒருவர். பிரதாப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாவர் கன்னத்தில் முத்தமிட்டாள், சர்வம், அரிமா நம்பி, ஜீரோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது தென்னிந்தியாவின் பிற மொழிகளிலும் பாலிவுட் படங்களிலும் நடித்திருக்கிறார். நடிகராக மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார் சக்கரவர்த்தி. தற்போது 46 வயதாகும் சக்கரவர்த்தி திருமணம் செய்ய முடிவெடுத்திருக்கிறார்.
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஜே.டி.சக்ரவர்த்தி கூறியிருப்பதாவது... ''திருமணத்திற்கு இப்போது தான் ரெடியாக இருப்பதாக கூறியுள்ளார். மேலும் இதுநாள் வரை திருமணம் செய்வதற்கு போதிய பக்குவமும், பொறுப்பும் வரவில்லை என்றும் இப்போது தான் வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சக்கரவர்த்தி திருமணம் செய்ய போகும் பெண் டில்லியை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.