பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
பசங்க, களவாணி, வாகை சூடவா என பல படங்களில் நடித்தவர் விமல், மினிமம் கியாரண்டி ஹீரோவாக இருந்து வந்த அவர், தான் நடித்த ஜன்னல் ஓரம் படத்தை ரிலீஸ் பண்ண முடியாமல் அப்பட தயாரிப்பாளர் தடுமாறியபோது தனது சம்பளத்தைக்கூட விட்டுக்கொடுத்தார். அதேபோல், சில படங்களை நட்புக்காகவும் கொடுத்த சம்பளத்தை வாங்கி நடித்தார். அதனால் விமலுக்கு சினிமா வட்டாரங்களில் நல்ல பெயரும் உண்டு. என்றாலும், சமீபகாலமாக அவர் நடித்த படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்து வருவதால் விமலின் மார்க்கெட் ஆட்டம் கண்டு கிடக்கிறது. அவரை நாயகனாக வைத்து படம் தயாரிக்க தயங்கி நிற்கிறார்கள்.
இந்த நிலையில், மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியாக தற்போது அவர் சதிபதி -என்றொரு படத்தில் வில்லனாக நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இந்த படத்தில் பட்டியல் உள்பட சில படங்களில் நடித்த நவ்தீப் நாயகனாக நடிக்கிறார். புதுமுக டைரக்டர் இயக்கும் இந்த படத்தின் ப்ரீ புரொடக்சன்ஸ் வேலைகள் துரிதமாக நடந்து வருகிறது. விரைவில் இப்படத்தின் பூஜை நடக்கயிருப்பதாகவும சொல்கிறார்கள். மேலும், இந்த படத்தில் விமல் எந்தமாதிரியான வில்லனாக நடிக்கிறார் என்பதை தற்போதைக்கு சஸ்பென்சாக வைத்திருக்கிறார்கள்.