ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
பாலிவுட்டின் முன்னாள் கனவுகன்னி ஹேமமாலினி நீண்ட இடைவெளிக்கு பின்னர் தெலுங்கு படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்டது. தேசிய விருது வென்ற கஞ்சே படத்தின் இயக்குனர், க்ரிஷ் பாலகிருஷ்ணாவின் 100வது படமான கௌதமிபுத்ர சாதகர்னி எனும் சரித்திர படத்தை இயக்குகின்றார். இப்படத்தில் பாலகிருஷ்ணாவின் அம்மாவகவும் ராஜமாதாவாகவும் நடிக்க ஹேமமாலினியிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றது. தற்போது இப்படத்தில் நடிக்க ஹேமமாலினி சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஏப்ரல் 22 ஆம் தேதி ஐதராபாத்தில் கௌதமிபுத்ர சாதகர்னி படத்தின் படப்பிடிப்புகள் துவங்கவுள்ளன. அன்றே இப்படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்களின் முழு விபரம் வெளியிடப்படும் என கூறப்படுகின்றது.