ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இளம் தலைமுறை கலைஞர்கள் இணைந்து இணைய தலைமுறை என்ற படத்தை உருவாக்கி வருகிறார்கள். இன்றைய இளம் காதலர்களிடையே இணையதளம், பேஸ்புக், டுவிட்டர், போன்றவை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அதன் பலம் என்ன பலவீனம் என்ன என்பதை சுற்றி திரைக்கதை அமைத்துள்ளார்கள். படப்பிடிப்புகள் திருவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதியில் நடந்து வருகிறது. மாறன் கிரியேஷன் சார்பில் பெ.இளந்திருமாறன் தயாரிக்கிறார்.
அஸ்வின் குமார் என்ற புதுமுகத்துடன் மனிஷாஜித் ஹீரோயினாக நடிக்கிறார். இவர்கள் தவிர 10க்கும் மேற்பட்ட புதுமுகங்கள் நடிக்கிறார்கள். ஆரோ ஒளிப்பதிவு செய்கிறார், டி.ஜே.கோபிநாத் இசை அமைக்கிறார். சு.சி.ஈஸ்வர் இயக்குகிறார். காதல், மோதல், செண்டிமெண்ட், கலந்து படம் உருவாகி வருகிறது.