மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சினிமாவில் நடிக்கும் நடிகைகளைப் பற்றிய வதந்தியான செய்திகள் என்றால் இரண்டே இரண்டு தான். ஒன்று அந்த நடிகைக்கும் அவருக்கும் காதல், அந்த நடிகைக்கும் கல்யாணம். இப்படி திடீர் திடீர் என வதந்திகள் கிளம்பும். அதில் சில வதந்தியாகவே போய்விடும், சில உண்மையாகிவிடும். காலம் காலமாக இப்படித்தான் வந்து கொண்டிருக்கிறது, அது இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
நேற்று திடீரென தமன்னாவைப் பற்றிய ஒரு காதல் வதந்தி ஹைதராபாத்தில் இருந்து மையம் கொண்டு வெளியானது. தமன்னா ஒரு சாப்ட்வேர் இஞ்சினியரைக் காதலிப்பதாகவும், அவரை அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துவிட்டார் என்றும் யாரோ கிளப்பி விட்டார்கள். அது மட்டுமல்ல திருமணத்திற்குப் பிறகு அவர் நடிக்க மாட்டார் என்றும் சில மீடியாக்கள் செய்தி வெளியிட்டு விட்டன. அந்தச் செய்தி தன் காதில் விழுந்ததுமே தமன்னா கோபப்பட்டுவிட்டார்.
“இன்னும் நீண்ட நாட்களுக்கு நான் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை. எனவே, தயவு செய்து இப்படி எந்த ஆதாரமற்ற செய்திகளையும் வெளியிடாதீர்கள். வெறுப்பாக இருக்கிறது. இப்படியெல்லாம் செய்தி வெளியிடுவதற்கு முன் சரிபார்த்துவிட்டு வெளியிடலாம். இதெல்லாம் வெட்கக்கேடான செயல்” என கோபத்துடன் பதிவிட்டுள்ளார்.