Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினிகாந்த் இந்த உலகின் ஸ்டார் மட்டுமல்ல... - ராம்கோபால் வர்மா

19 ஏப், 2016 - 17:30 IST
எழுத்தின் அளவு:
Did-Ramgopalvarma-praises-or-slams-Rajini.?

ராம்கோபால் வர்மா, சர்ச்சைகளின் மொத்த உருவமாக இருக்கும் இயக்குனர். எப்போது, எதற்காக, என்ன பேசுகிறேன் என்று தெரியாமலேயே பேசுபவர், இல்லை இல்லை டிவீட்டுபவர். டிவிட்டரில் அதிக அளவில் சர்ச்சையைக் கிளப்பும் இயக்குனர் என இவரை மட்டும் தாராளமாகச் சொல்லலாம்.


சில தினங்களுக்கு முன் நடிகை எமி ஜாக்சன், ரஜினிகாந்துடன் இருக்கும் ஒரு செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அந்தப் புகைப்படத்தை தன்னுடைய கணக்கில் பதிவிட்டு, ரஜினிகாந்த் பற்றி சில கருத்துக்களைப் பதிவு செய்திருந்தார் ராம்கோபால் வர்மா. அதில், “ஒரு நட்சத்திர பெருமைக்குரிய முக்கியமான தோற்றங்கள் அனைத்தையும் இந்த பெரிய மனிதர் மொத்தமாக அழித்துள்ளார். இவர் மோசமான தோற்றம் கொண்டவர், 6 பேக் இல்லை, முறையற்ற உடல்தோற்றம் கொண்டவர், நடனம் ஆடத் தெரியாதவர். இப்படிப்பபட்ட ஒரு மனிதர் உலகில் எங்குமே சூப்பர் ஸ்டாராக இருக்க முடியாது. அவர் கடவுளுக்கு என்ன செய்தார், கடவுள் அவருக்கு என்ன செய்தார் என்று நான் ஆச்சரியப்பட்டதுண்டு.


சினிமாவில் ரசிகர்கள் எதை ரசிக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முடியாததற்கு ரஜினி சார்தான் மிகப் பெரிய உதாரணம். இந்த உலகத்தில் உள்ள மனநல மருத்துவர்கள் கூட ரஜினியின் அதிசயம் பற்றி புரிய வைக்கச் சொன்னால் குழம்பி விடுவார்கள்,” எனக் குறிப்பிட்டிருந்தார்.


அதைத் தொடர்ந்து ரஜினிகாந்தை ராம்கோபால் வர்மா கிண்டலடிக்கிறார் என நினைத்து ரஜினி ரசிகர்கள் அவருக்கு தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர்.


ஆனால், ராம்கோபால் வர்மா, “சில அடிமுட்டாள் ரசிகர்கள் ரஜினிகாந்தை நான் பாராட்டுகிறேன் என்பது கூடத் தெரியாமல் உள்ளனர். ரஜினியின் முட்டாள் ரசிகர்கள் என்னுடைய டிவீட்டுகள் அவருக்கான 'காம்ப்ளிமென்ட்' என்பதைப் புரிந்து கொள்ளவில்லை. ரஜினியே அவரைப் பற்றி சுவாரசியமாகப் பேசியதைப் பார்க்கட்டும்,” என ரஜினி பேசிய வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.


தொடர்ந்து, “என்னைப் பற்றித் தவறாகப் பேசும் அனைத்து ரஜினியின் முட்டாள் ரசிகர்களும் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். என்னுடைய ஹிட் படங்களை விட நான் ரஜினியின் நிறைய 'பிளாப்' படங்களைப் பல முறை பார்த்திருக்கிறேன்.


என்னுடைய டிவீட்டுகளை அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டதைப் பார்த்தால், பவர் ஸ்டார் ரசிகர்களை விட ரஜினி சாரின் ரசிகர்கள் முட்டாள்களாக இருப்பார் என்றே தோன்றுகிறது. ஜெய் ரஜினி, ஜெய் பவர் ஸ்டார்,” என்றும் நேற்று நள்ளிரவு வரை நக்கல் அடித்துள்ளார்.


என்ன நடந்ததோ இன்று காலை ரஜினியின் அழகான புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டு “இந்த பூமியில் உள்ள ஸ்டார்களுக்கெல்லாம் மட்டும் அவர் ஸ்டார் அல்ல, அதே சமயம் சொர்க்கத்தில் உள்ள ஸ்டார்களுக்கெல்லாம் ஸ்டார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


இதில் கூட பாராட்டை விட ராம்கோபால் வர்மாவின் நக்கல்தான் அதிகம் காணப்படுகிறது. இதற்கு ரஜினி ரசிகர்கள் அடுத்து என்ன சொல்லப் போகிறார்களோ ?....


Advertisement
2 மில்லியனைக் கடந்த 24 டிரைலர்2 மில்லியனைக் கடந்த 24 டிரைலர் தெறியால் நஷ்டமா...? அமீர் விளக்கம் தெறியால் நஷ்டமா...? அமீர் விளக்கம்


வாசகர் கருத்து (10)

Vaal Payyan - Chennai,இந்தியா
20 ஏப், 2016 - 15:28 Report Abuse
Vaal Payyan லூசு பய்யா .... நீ அதி மேதாவி ன்னு நினைக்குற இந்த நெனப்பு தான் உன் பொழப்ப கெடுக்குது
Rate this:
Nallavanukku Nallavan-Chennai - Dar Es Sallam,தான்சானியா
20 ஏப், 2016 - 10:45 Report Abuse
Nallavanukku Nallavan-Chennai ரஜினி சிறந்த நடிகர். நடிப்பதற்கு அழகு தேவை இல்லை என்ற சினிமா மோகத்தை தகர்த்தவர் இந்த ரஜினிதான். உன்னை மாதிரி யாரையாவது குறை சொல்லி பெரிய ஆள் என்று காட்டி கொள்ளும் கேவலமான புத்தி உனக்கு மட்டும் தான். எப்பயாவது எதையாவது கொளுத்தி போட்டு குளிர்காயும் KK நீ. பின் அப்படியே தோசையை திருப்பி போடுபவன் நீ. நீ புத்திசாலி என்றால் உன் படம் ஏன் ஓட வில்லை. மத்தவரை குறை சொல்லும் நீ ஒரு டுபாகூர்
Rate this:
sudhapriyan - riyadh,சவுதி அரேபியா
20 ஏப், 2016 - 09:14 Report Abuse
sudhapriyan அவர்கள் சொல்வது இருக்கட்டும் . தினமலருக்கு வேற நல்ல செய்திகளே இல்லையா ..இந்த லூசு பேசறத எல்லாம் போட்டு பிரச்சனைய உண்டு பண்ணனுமா?
Rate this:
Shanu - Mumbai,இந்தியா
19 ஏப், 2016 - 23:17 Report Abuse
Shanu இந்தியாவில் மட்டும் தான் நடிப்பவர்கள் தலைவர் ஆகலாம். முட்டாள் மக்கள்........ நடிகர் நல்லவர் போல் நடிப்பதை வைத்து, அவர் நல்லவர் என்று எண்ணுகின்றனர். வில்லன் நடிகரை கெட்டவர் என்று நினைத்து கொள்கின்றனர். அவர்கள் நடிக்கிறார்கள், நம் பொழுது போக்குக்கு படத்தை பார்த்து மறந்து விட வேண்டும். நடிகர்களை ஆராதிக்க தேவை இல்லை. இது கற்காலம் என்று இருந்திருந்தால், இவர்களை கடவுளாக கூட சித்தரித்து விடுவார்கள். முட்டாள் ரசிகர்களை நினைத்தால், நொந்து கொள்வதை தவிர வேறு ஒன்றும் செய்ய தோன்றவில்லை.
Rate this:
Vijay D.Ratnam - Chennai,இந்தியா
19 ஏப், 2016 - 21:52 Report Abuse
Vijay D.Ratnam எமி ஜாக்சனோடு ரஜினி இருக்கும் அந்த போட்டோவை பாருங்கள். பொதுவாக ஐரோப்பிய மாடல்கள் கருப்பர்களுடன் விளம்பரங்களில் தோன்றுவதை விரும்புவார்கள். கன்னங்கரேலென்று மொட்டைஅடித்துக்கொண்டு கரடுமுரடாக இருக்கும் கருப்பர்களுக்கு அருகில் சுமாரான வெள்ளைக்காரிகள் கூட பேரழகியாக தெரிவார்கள்.அது மாதிரி. இப்ப ரன்பீர்கபூர், ஹ்ரிதிக் ரோஷன் பக்கத்துல எமி ஜாக்சன் நின்றால் ப்யூஸ் போன பல்பு மாதிரி இருக்கும், அதுவே ரஜினிகாந்த், கவுண்டமணி பக்கத்துல நின்றால் உலக அழகி மாதிரி தெரியும்.
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mr Chandramouli
  Tamil New Film Saamy 2
  • சாமி 2
  • நடிகர் : விக்ரம் ,
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :ஹரி
  Tamil New Film Karu
  • கரு
  • நடிகை : சாய் பல்லவி
  • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
  Tamil New Film Pariyerum perumal

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in