தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள வேண்டும் என்பது போல் மார்க்கெட்டில் இருக்கும் நடிகைகள் அனைவருமே இந்த சூட்டோடு சூடாக அஜித் படத்தில் நடித்து விட வேண்டும என்பதில் ஆர்வமாக உள்ளனர். அந்த வகையில், சில ஹிட் படங்களில் நடித்து வந்த லட்சுமிமேனன் வேதாளம் படத்தில் அஜித்தின் தங்கையாக நடித்து தனது ஆசையை நிறைவேற்றிக்கொண்டார். அதையடுத்து பல நடிகைகள் அஜித் படத்தில் கதாநாயகியாகவோ அல்லது முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரிலோ நடித்து விட வேண்டும் என்று கடுமையாக முயற்சி எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், தற்போது அஜித்தில் 57வது படத்தை சிவா இயக்கும் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார். அப்படத்தில் இரண்டு நாயகிகள் இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானதை அடுத்து தென்னிந்திய சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகைகளும் போட்டா போட்டியில் இறங்கினர். அவர்களில் கீர்த்தி சுரேசும் ஒருவர்.
ரஜினி முருகன் ஹிட்டுக்குப்பிறகு தற்போது விஜய்யின் 60-வது படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், இந்த நேரத்தில் அஜித் படத்தில் நடிக்க முயற்சி எடுத்தால் ஒர்க்அவுட்டாக நிறைய வாய்ப்பு இருக்கிறது என்பதால் தீவிரமான முயற்சி எடுத்து வந்தார். ஆனால், அந்த படம் சம்பந்தமாக டைரக்டர் சிவாவை சந்திக்க அவர் அப்பாய்ண்மென்ட் கேட்டபோது அவர் பிசியாக இருப்பதாக சொல்லி சொல்லி இழுத்தடித்து விட்டார்களாம். அதனால் ஒருகட்டத்தில் அந்த முயற்சியில் இருந்து பின்வாங்கி விட்டாராம் கீர்த்தி சுரேஷ்.