மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ரஜினி முருகன் படத்திற்குப் பிறகு தன்னுடைய நண்பரின் பெயரில் தொடங்கிய '24 ஏஎம் ஸ்டுடியோஸ்' நிறுவனம் தயாரிப்பில் ரெமோ படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் வளர்ந்து வரும் 'ரெமோ' படத்தில் தற்போது நடித்து வரும் சிவகார்த்திகேயன், இப்படம் முடிந்ததும், மோகன் ராஜா இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்தில்அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ஏற்கெனவே, 'எதிர்நீச்சல்' படத்தில் இருவரும் இணைந்து குத்தாட்டம் போட்டிருந்தாலும், ஜோடியாக நடிப்பது இதுவே முதல்முறை.
தன்னுடைய தயாரிப்பில் முதல் படத்துக்கு அனிருத்தை இசையமைப்பாளராக புக் பண்ணிய சிவகார்த்திகேயன் தன்னுடைய பேனரரில் தயாராகும் இரண்டாவது படத்துக்கு இமானை புக் பண்ணுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். இந்த எதிர்பார்ப்பு இமானுக்கே இருந்தது.
இந்நிலையில், இமானுக்கு ஏமாற்றம் அளிக்கும்வகையில் மீண்டும் அனிருத்துக்கே வாய்ப்பு கொடுத்திருக்கிறார். மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கும் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் என்ற செய்தியை அனிருத்தே தனது ட்வீட் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.
சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்துள்ள எதிர்நீச்சல், மான் கராத்தே, காக்கி சட்டை, ரெமோ ஆகிய படங்களைத் தொடர்ந்து 5ஆவது முறையாக அவரின் படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருக்கிறார். மனம் கொத்திப் பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என சிவகார்த்திகேயளின் முந்தைய படங்களில் தொடர்ந்து ஹிட் கொடுத்தும் இமான் உடன் மீண்டும் இணைவதில் சிவகார்த்திகேயனுக்கு என்ன தயக்கமோ?