மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
நிதின் - சமந்தா ஜோடி சேரும் அ.ஆ படத்தில் சமந்தாவின் அம்மாவாக முன்னாள் கதாநாயகி நதியா நடித்துள்ளார். சமந்தாவின் அப்பாக நடிகர் நரேஷ் நடித்துள்ளாராம். இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் தயாரிப்பாளர் ராதா கிருஷ்ணன் ஹாரிகா & ஹாசினி பட நிறுவனத்தின் கீழ் தயாரிக்கும் அனுஷ்யா ராமலிங்கம் Vs ஆனந்த் விஹரி படத்தை சுருக்கமாக அ.ஆ என அழைக்கின்றனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இப்படத்தில் நடித்தது குறித்து நதியா கூறுகையில், திரிவிக்ரம் எனது நல்ல நண்பர்களில் ஒருவர். எப்பொழுதும் என்னை கிண்டலாக வயதான நாயகி என அழைக்கும் திரிவிக்ரம் நான் 80 வயது வரை நடிக்க வேண்டும் என விரும்புவதாக தெரிவித்தார். பிரேமம் நாயகி அனுபமா பரமேஷ்வரன் இப்படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்துள்ளார். இசையமைப்பாளர் மிக்கி ஜே மேயர் இப்படத்திற்கு இசையமைக்கின்றார். மே 6 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது.