தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில், சல்மான்கான், அனுஷ்கா சர்மா நடிப்பில் உருவாகி வரும் படம் 'சுல்தான்'. மல்யுத்தத்தை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில் சல்மான், மல்யுத்த வீரராக நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் டில்லியில் படப்பிடிப்பை முடித்த படக்குழு அடுத்தப்படியாக முஷாபர் நகருக்கு செல்கின்றனர். நாளை முதல் ஆரம்பமாகும் சுல்தான் படத்தின் படப்பிடிப்பு இதோடு முடியும் என தெரிகிறது.
சமீபத்தில் சல்மானின் சுல்தான் பட போட்டோக்கள் இணையதளத்தில் லீக்கானதால் தொடர்ந்து படப்பிடிப்பு தளத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. அதன்படி முஷாபர்நகரில் நடக்கும் படப்பிடிப்பு தளத்திற்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுல்தான் படம் இந்தாண்டு ரம்ஜான் பண்டிகையின் போது ரிலீஸாக இருக்கிறது.