தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ்த் திரையுலகத்தின் அடுத்த பெரும் எதிர்பார்ப்பாக இருக்கும் படம் 'கபாலி'. இளம் இயக்குனரான பா.ரஞ்சித்துடன் ரஜினிகாந்த் இணைந்த போதே இப்படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அடுத்து வெளிவந்த முதல் பார்வை போஸ்டர்களும் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. மலேசியா, தாய்லாந்து, சென்னை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் ரஜினிகாந்த் ஷங்கர் இயக்கும் 2.ஓ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்றுவிட்டார்.
இன்று 'கபாலி' படத்தின் டப்பிங்கை ரஜினிகாந்த் ஆரம்பித்துவிட்டார். டப்பிங் பேச வந்த அவரை தயாரிப்பாளர் தாணுவும், இயக்குனர் பா.ரஞ்சித்தும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்கள். வழக்கம் போலவே மகிழ்ச்சி என்ற ஒற்றை வார்த்தையுடன் தன் மகிழ்வை வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித். இத்திரைப்படம் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் டீசர் வரவும் வாய்ப்புள்ளது.