தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்த நான் என்ற முதல் படத்தை இயக்கியவர் ஜீவா சங்கர். அந்த படம் ஓரளவு பேசப்பட்டதால் அதையடுத்து விஜய் ஆண்டனிக்கு நடிப்பு மீதான ஆர்வம் அதிகரித்தது. அதனால் அடுத்தடுத்து தொடர்ச்சியாக நடிக்கத் தொடங்கியவர் பிச்சைக்காரன் படத்தை சூப்பர் ஹிட்டாக கொடுத்து கவனிக்கப்படும் ஹீரோவாகி விட்டார். இந்த நிலையில், தற்போது தனது முதல் பட இயக்குனரான ஜீவா சங்கர் இயக்கத்தில் எமன் என்ற படத்தில் மீண்டும் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் முதன்முறையாக மாஸ் ஹீரோ கதையில் நடிக்கிறார் விஜய் ஆண்டனி. இதன் படப்பிடிப்பு கடந்த ஒரு மாதகாலமாக பாண்டிச்சேரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து வந்தது. அங்கே பெரும்பாலான வசனம் மற்றும் சண்டை காட்சிகளை முடித்து விட்டார்களாம். அந்த வகையில், கிட்டத்தட்ட முதல்கட்ட படப்பிடிப்பிலேயே பாதி படத்தை அவர்கள் முடித்து விட்டதாக கூறப்படுகிறது. தற்போது சென்னை திரும்பியிருக்கும் விஜய் ஆண்டனி, அடுத்தபடியாக சைத்தான் படத்தில் பேலன்ஸ் இருக்கும் இரண்டு பாடல்களை சென்னையிலேயே நடித்துக்கொடுத்து விட்டு, மீண்டும் எமன் படப்பிடிப்பில் முழுவீச்சில் இறங்கப்போகிறாராம்.