ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மதராசப்பட்டினம் படத்துக்காக கோடம்பாக்கத்துக்கு இறக்குமதி செய்யப்பட்டவர் லண்டன் நடிகை எமிஜாக்சன். முதல் படமே ஹிட்டாக அமைந்ததால் அதையடுத்து விக்ரம், விஜய், தனுஷ் என முன்னணி ஹீரோக்களுடன் அடுத்தடுத்து நடித்த அவர், தற்போது ரஜினி நடிக்கும் 2.ஓ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். ரஜினியுடன் நடிப்பது இந்திய நடிகைகளுக்கே குதிரைக்கொம்பாக இருந்து வரும் நிலையில், எமிக்கு வந்த வேகத்திலேயே கிடைத்திருப்பது சினிமா வட்டாரத்தை ஆச்சர்யப்படுத்தி வருகிறது. அதோடு அவரை அதிர்ஷ்டக்கார நடிகையாகவே மற்ற நடிகைகள் பார்க்கிறார்கள்.
மேலும், இந்த படத்தில் தான் ரஜினியுடன் நடிப்பதற்கு முன்பு தொடங்கி நடிக்க ஆரம்பித்தது வரை அவ்வப்போது தனது உணர்வுகளை டுவிட்டரில் பதிவு செய்து வந்த எமிஜாக்சன், தற்போது ரஜினியுடன் தான் எடுத்துக்கொண்ட செல்பியை பதிவு செய்திருக்கிறார். அதோடு, நான் மிக சந்தோசமாக எடுத்துக் கொண்ட படம் இது. இதற்கு முன்பு இவ்வளவு சந்தோசமாக நான் எந்த போட்டோவையும் எடுத்துக்கொண்டதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார் எமிஜாக்சன்.