Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தென்னிந்திய நட்சத்திர கிரிக்கெட் - சூர்யா அணி வெற்றி

17 ஏப், 2016 - 22:16 IST
எழுத்தின் அளவு:
Nadigar-Sangam-Natchathira-Cricket---Suriya-team-won-the-title

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கட்டடம் கட்டுவது தொடர்பாக நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் சூர்யா தலைமையிலான சென்னை சிங்கம்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.


நட்சத்திர கிரிக்கெட்


நாசர், விஷால், கார்த்தி தலைமையிலான நிர்வாகிகள் நடிகர் சங்கத்திற்கு பொறுப்பிற்கு வந்தபின்னர், முதற்கட்டமாக நடிகர் சங்கத்தின் நிலத்தை மீட்டனர். அதன்பின்னர் கட்டடம் கட்ட, நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது.


8 அணிகள்


அதன்படி, நடிகர்கள் 8 அணிகளாக பிரிந்து விளையாடினார்கள். இந்த அணிகளுக்கு, சென்னை சிங்கம்ஸ், மதுரை காளைஸ், கோவை கிங்ஸ், நெல்லை டிராகன்ஸ், ராம்நாட் ரைனோஸ, தஞ்சை வாரியர்ஸ், சேலம் சீட்டாஸ், திருச்சி டைகர்ஸ் என பெயரிடப்பட்டு, இந்த அணிகளின் கேப்டன்களாக சூர்யா, விஷால், கார்த்தி, ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, ஜீவா, ஆர்யா, சிவகார்த்திகேயன் ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.


எயிட்ஸ் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிதி


சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி சிறப்பாக நடந்தது. போட்டி துவங்கும் முன்னர் தமிழ்தாய் வாழ்த்து மற்றும் நாதஸ்வரம், மேளம், கரகாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலைகளுடன் நட்சத்திர கிரிக்கெட் நிகழ்ச்சி துவங்கப்பட்டது. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிதி உதவிக்கான காசோலையை சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட ரஜினி, கமல், தெலுங்கு நடிகர்கள் வெங்கடேஷ், பாலகிருஷ்ணா ஆகியோர் கூட்டாக வழங்கினர்.


போட்டியை துவக்கி வைத்த ரஜினி-கமல்


முதல்போட்டியை நடிகர்கள் ரஜினி-கமல் இருவரும் டாஸ் போட்டு போட்டியை துவக்கி வைத்தனர். 8 அணிகள் மோதிய இப்போட்டிகள், 5 ஓவர்கள் கொண்ட போட்டியாக அமைந்தது. முதல்போட்டியில் சூர்யாவின் சென்னை சிங்கம்ஸ் அணியும், சிவகார்த்திகேயனின் திருச்சி டைகர்ஸ் அணியும் மோதின. இதில் சூர்யா அணி வெற்றி பெற்றது. தொடர்ந்து மற்ற அணிகளும் விளையாடின. அரையிறுதி போட்டிக்கு சூர்யா, ஆர்யா, ஜீவா மற்றும் விஜய் சேதுபதி அணிகள் தகுதிபெற்றன. முதலாவது அரையிறுதி போட்டியில் சூர்யா அணியும், ஆர்யா அணியும் மோதின. இதில் சூர்யா அணி வெற்றி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இதையடுத்து நடந்த இரண்டாவது அரையிறுதி போட்டியில் விஜய்சேதுபதி அணியும், ஜீவா அணிகளும் மோதின. இதில் ஜீவா அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.


கோப்பையை வென்ற சூர்யா அணி


இறுதிபோட்டியில் சூர்யாவின் சென்னை சிங்கம்ஸ் அணியும், ஜீவாவின் தஞ்சை வாரியர்ஸ் அணியும் மோதினர். 6 ஓவர் கொண்ட போட்டியாக நடந்த இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய ஜீவா தலைமையிலான தஞ்சை அணி, 6ஓவரில் 83 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய சூர்யாவின் சென்னை அணி, 5 ஓவரிலேயே 84 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், நட்சத்திர கோப்பையையும் தட்டிச்சென்றது.


விஜய், அஜித் ஆப்சென்ட்


தென்னிந்திய நடிகர் சங்க நட்சத்திர கிரிக்கெட்டிற்கு மலையாளத்திலிருந்து மம்முட்டி, நிவின்பாலி, தெலுங்கிலிருந்து பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், ஸ்ரீகாந்த், கன்னடத்திலிருந்து சிவராஜ்குமார், புனீத்ராஜ்குமார், சுதீப், அம்ரீஷ் உள்ளிட்ட நடிகர்கள் வந்திருந்தனர். ஆனால் இங்கிருக்கும் விஜய், அஜித், சிம்பு, த்ரிஷா, நயன்தாரா, ஹன்சிகா உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் யாரும் கலந்து கொள்ளாதது ஏமாற்றத்தை அளித்தது.


Advertisement
மீண்டும் இணையும் அஜித் முருகதாஸ் கூட்டணிமீண்டும் இணையும் அஜித் முருகதாஸ் ... ரஜினியுடன் செல்பி : மகிழ்ச்சி வெள்ளத்தில் எமி! ரஜினியுடன் செல்பி : மகிழ்ச்சி ...


வாசகர் கருத்து (12)

Raj - Chennai,இந்தியா
18 ஏப், 2016 - 17:12 Report Abuse
Raj திமுக இலவசம் இல்லை என்று அறிக்கை, கூட்டமே வராத நடிகர்கள் போட்டி, ரொம்ப சந்தோசம் .. நம்ம மக்கள் மனநிலை முன்னேறி வருவது சந்தோசம், நம்ம தமிழ்நாடு முன்னேறிடும் போல இருக்கு :)
Rate this:
Rajamani Shanmugavelu - Male,மாலத்தீவு
18 ஏப், 2016 - 10:02 Report Abuse
Rajamani Shanmugavelu திருந்தாத ஜென்மங்கள் உள்ளவரை இவர்களுக்கு கொண்டாட்டம்தான்...கோவில் வாசலில் உண்மையாக பிச்சை எடுப்பவருக்கும் இவங்களுக்கும் வித்தியாசம் இல்லை..
Rate this:
karutthu kandhasamy - Kandhagar,ஆப்கானிஸ்தான்
18 ஏப், 2016 - 09:02 Report Abuse
karutthu kandhasamy Good
Rate this:
vadivelu - chennai,இந்தியா
18 ஏப், 2016 - 08:10 Report Abuse
vadivelu மொத்தம் எவ்வளவு வசூலாயிற்று? கணக்கு கேட்க ஒரு கூட்டம் தயாராமே?
Rate this:
navin - Chennai,இந்தியா
18 ஏப், 2016 - 07:34 Report Abuse
navin பெரிய உலக கோப்பையை வின் பண்றாங்க . ப்ரெட் லீ , மெக்ராத் , வாசிம் அகரம் , சச்சின் , ரிக்கி பாண்டிங் , காலிஸ் , போன்ற ஜாம்பவான்கள் விளையாடிய விளையாட்டை இந்த கோமாளிகள் விளையாடுவதா? அதுவும் அவர்களின் சொந்த நோக்கத்துக்காக . கிரௌண்ட்ல மொத்தமா 3000 பேர் இருந்து இருந்த பெரிய விஷயம் . இதெல்லாம் தினமலர்ல வராதே . என்ன அவங்க குடுக்கற பணம் வராம போச்சுன்னா என்ன பண்றதுன்னு தினமலருக்கு பயம் . நட்சத்திர கிரிக்கெட் படுதோல்வி அடைந்து விட்டது.....
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Chekka Chivantha Vaanam
    Tamil New Film 96
    • 96
    • நடிகர் : விஜய் சேதுபதி
    • நடிகை : த்ரிஷா
    • இயக்குனர் :பிரேம்குமார்
    Tamil New Film MGR
    Tamil New Film Kalavani Mappillai
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in