Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் இணையும் அஜித் முருகதாஸ் கூட்டணி

17 ஏப், 2016 - 15:40 IST
எழுத்தின் அளவு:
A.R.Murugadoss-will-direct-Ajith-after-15-years

கோலிவுட் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் முன்னணியில் இருக்கும் இயக்குனர்களில் ஒருவராக மாறி வருகிறார் ஏ.ஆர் முருகதாஸ். அஜித்தின் ''தீனா''படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனவர் முருகதாஸ். அஜித்துக்கு ''தீனா'' படத்தில் இருந்த தான் ''தல'' என்ற பெயர் வந்தது. தீனா படம் அஜித்திற்கு திருப்புமுனை தந்த படமாக அமைந்தது. அதன் பிறகு இருவரும் இணைந்து படம் பண்ண உள்ளதாக பேசப்பட்டாலும் இது வரை இருவரும் மிகவு்ம பிஸியாக இருக்கின்றனர். ஆனால் 15 வருடத்திற்கு பிறகு தற்போது இணைந்து பணியாற்ற போவதாக கூறுகின்றனர். அஜித்தின் 58வது படத்தை முருகதாஸ் எடுக்க இருக்கிறார் என தகவல் கசிந்துள்ளது.

இதற்கிடையில் அஜித் தற்போது அடுத்தப் படத்திற்கான வேலைகளில் இறங்கி உள்ளார். வேதாளம் மற்றும் வீரம் படத்தை இயக்கிய இயக்குனர் சிவா, அஜித்தை வைத்து எடுக்கும் ஹாட்ரிக் படம் தல 57 . இந்த படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதம் துவங்க உள்ளதாம். இதற்கு பிறகு இயக்குனர் விஷ்ணுவர்தன் அஜித்தை வைத்து படம் எடுக்க உள்ளார். ஆனால் இயக்குனர் விஷ்ணுவர்தனின் படத்திற்கு பிறகு இயக்குனர் முருகதாஸ் படம் வருமா இல்லை முன்னர் வருமா என்று திட்டவட்டமாக தெரிவில்லை.


ஏ.ஆர் முருகதாஸ் அஜித்தை வைத்து எடுக்க இருக்கும் அடுத்த படத்தை தயாரிக்க முருகதாஸ் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் பிலிம்சிடம் கேட்டு உள்ளாராம். இது தொடர்பாக உதயநிதியிடம் முருகதாஸ் பேசிய போது, அவர் உடனே ஓகே சொல்லி விட்டாராம். ஆனால் இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in