'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கபாலி படத்தில், கேங்ஸ்டரான ரஜினிஒரு முக்கிய பிரச்சினைக்காக மலேசியா செல்வதும், பின்னர் ரஜினி அங்குள்ள ஜெயிலில் அடைக்கப்படுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில், கபாலி கதையில் மலேசியாதான் கதையின் மையக்கருவாக அமைந்திருக்கிறது. அதேபோல்தான் விக்ரம் நடித்து வரும் இருமுகன் படத்தில் மையக் கருவும் மலேசியாவை மையப்படுத்தப்பட்டுள்ளதாம்.
அதாவது, இந்த படத்தில் அகிலன் என்றொரு உளவாளி வேடத்தில் நடிக்கிறார் விக்ரம். இந்த படத்திலும் ஒரு முக்கிய பிரச்சினைக்காக மலேசியா செல்வது போன்றுதான விக்ரம் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்திற்காக உடம்பு முழுக்க டாட்டூ வரைந்து நடித்திருக்கிறாராம் விக்ரம். ஆக, கபாலி, இருமுகன் என்ற இரண்டு படங்களுமே சென்னையிலிருந்து ஒரு பிரச்சினையை தீர்ப்பதற்காக மலேசியா செல்வது போன்றுதான் கதை அமைக்கப்பட்டிருக்கின்றன.