ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நகுல், பாலிவுட் நடிகை ஆஞ்சல், பிரகாஷ்ராஜ், நாசர் நடிக்கும் படம் செய். இப்படத்தை கோபாலன் மனோஜ் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே மலையாளத்தில் சாரதி என்கிற வெற்றிப்படம் கொடுத்திருப்பவர். ஆல்பங்கள் இசையமைத்துள்ள நிக்ஸ் லோபஸ் செய் படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். பியாண்ட் ஐ எண்டர் டெயின்மெண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த சுபின் மற்றும் ட்ரிப்பி டர்ட்டில் புரொடக்ஷன்ஸ் மன்னு, உமேஷ் ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார்கள். இது சினிமா பின்னணியிலான கதையில் உருவாகும் ஒரு படமாக இருக்கும். இப்படத்தின் பூஜை மற்றும் தொடக்கவிழா பிரசாத் லேப் தியேட்டரிலுள்ள பிள்ளையார் கோவிலில் நடைபெற்றது.
இது எனக்கு முதல் தமிழ்ப்படம், ஒரு பெரிய நடிகராக நினைக்கும் ஒரு பையனும், ஒரு பெரிய இயக்குநராக நினைக்கும் ஒரு பெண்ணும் இடையே நடக்கும் கதை தான் செய் என்கிறார் இயக்குநர் கோபாலன் மனோஜ்.