தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், ஜீவன், சோனியா அகர்வால், அப்பாஸ், மாளவிகா, விவேக் நடித்து, 2006ஆம் ஆண்டு வெளிவந்த படம் 'திருட்டுப்பயலே'. சுசி கணேசன் என்பவர் இப்படத்தை இயக்கி இருந்தார். நெகடிவ் ரோலில் ஜீவன் நடித்திருந்த இப்படம் ஓரளவு வரவேற்பைப் பெற்றது. திருட்டுப்பயலே படத்தைத் தயாரித்தவகையில் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டதாக அப்போது சொல்லப்பட்டாலும், படத்தை வாங்கியவர்களுக்கு நஷ்டம் வராத அளவுக்கு ஓரளவு வசூலும் செய்தது. கிட்டத்தட்ட 10 வருடங்களுக்குப் பிறகு, தற்போது திருட்டுப்பயலே படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது.
முதல் பாகத்தை எடுத்த ஏஜிஎஸ் நிறுவனமே இரண்டாம்பாகத்தை தயாரிக்கிறது. திருட்டுப்பயலே படத்தின் முதல் பாகத்தை இயக்கிய சுசிகணேசனே இந்த 2ஆம் பாகத்தையும் இயக்குகிறார். தகவல் தொழில்நுட்பத்தின் உதவி மூலம் பெண்களை ஏமாற்றும் வேலைகளில் ஈடுபடுபவராக படத்தின் ஹீரோ நடிக்க இருப்பதாக தெரிகிறது. முதல் பாகத்தில் நடித்த ஜீவன், அல்லது பிரசன்னா, நகுல் ஆகியே மூவரில் ஒருவரை ஹீரோவாக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறதாம். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த படங்களிலேயே சின்ன பட்ஜெட்டில் உருவாகும் படம் இதுதான் என்று சொல்லப்படுகிறது.