Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

லோ பட்ஜெட்டில் தயாராகும் திருட்டுப்பயலே-2

16 ஏப், 2016 - 18:38 IST
எழுத்தின் அளவு:
Thiruttupayale-in-sequel

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், ஜீவன், சோனியா அகர்வால், அப்பாஸ், மாளவிகா, விவேக் நடித்து, 2006ஆம் ஆண்டு வெளிவந்த படம் 'திருட்டுப்பயலே'. சுசி கணேசன் என்பவர் இப்படத்தை இயக்கி இருந்தார். நெகடிவ் ரோலில் ஜீவன் நடித்திருந்த இப்படம் ஓரளவு வரவேற்பைப் பெற்றது. திருட்டுப்பயலே படத்தைத் தயாரித்தவகையில் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டதாக அப்போது சொல்லப்பட்டாலும், படத்தை வாங்கியவர்களுக்கு நஷ்டம் வராத அளவுக்கு ஓரளவு வசூலும் செய்தது. கிட்டத்தட்ட 10 வருடங்களுக்குப் பிறகு, தற்போது திருட்டுப்பயலே படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது.


முதல் பாகத்தை எடுத்த ஏஜிஎஸ் நிறுவனமே இரண்டாம்பாகத்தை தயாரிக்கிறது. திருட்டுப்பயலே படத்தின் முதல் பாகத்தை இயக்கிய சுசிகணேசனே இந்த 2ஆம் பாகத்தையும் இயக்குகிறார். தகவல் தொழில்நுட்பத்தின் உதவி மூலம் பெண்களை ஏமாற்றும் வேலைகளில் ஈடுபடுபவராக படத்தின் ஹீரோ நடிக்க இருப்பதாக தெரிகிறது. முதல் பாகத்தில் நடித்த ஜீவன், அல்லது பிரசன்னா, நகுல் ஆகியே மூவரில் ஒருவரை ஹீரோவாக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறதாம். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த படங்களிலேயே சின்ன பட்ஜெட்டில் உருவாகும் படம் இதுதான் என்று சொல்லப்படுகிறது.


Advertisement
தெறிக்க விடாத தியேட்டர்களில் வெற்றிவேல்தெறிக்க விடாத தியேட்டர்களில் ... ஜனனி ஐயர் நடிக்கும் “விதி மதி உல்டா” ஜனனி ஐயர் நடிக்கும் “விதி மதி உல்டா”


வாசகர் கருத்து (1)

Sekar - MM Nagar  ( Posted via: Dinamalar Android App )
16 ஏப், 2016 - 22:54 Report Abuse
Sekar நட்டம் ஏற்படுத்திய படத்திற்கு ஏன் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும்? அதுவும் அதே தயாரிப்பாளரே ஏன் தயாரிக்க வேண்டும்? அப்படி நட்டம் ஏற்படுத்தியும் இரண்டாம் பாகம் எடுக்கும் அளவு நல்ல கதையுமல்ல. கள்ளக்காதல் பற்றிய படம்தான் அது. தயாரிப்புத் தரப்பினர் விளக்குவார்களா?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Yang Mang Chang
    • யங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Sandi Muni
    • சண்டி முனி
    • நடிகர் : நடராஜ் சுப்ரமணியம்
    • நடிகை : மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மில்கா செல்வகுமார்
    Tamil New Film Rajabheema
    • ராஜபீமா
    • நடிகர் : ஆரவ்
    • இயக்குனர் :நரேஷ் சம்பத்
    Tamil New Film Billa Pandi
    • பில்லா பாண்டி
    • நடிகர் : ஆர் கே சுரேஷ்
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :சரவண சக்தி
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in