தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'ஏக்தா டைகர்' படத்தில் சல்மானும், கத்ரீனாவும் இணைந்து நடித்தார்கள். அதன்பின்னர் இந்த ஜோடி மீண்டும் சேராதா.? என்று ரசிகர்கள் ஏங்கிய நிலையில், இப்போது அதற்கான சூழல் அமைந்துள்ளது. பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் சாஜித் நாடியாவாலா, சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி ஹிட்டான 'கஷனம்' படத்தின் ரீ-மேக் உரிமையை வாங்கியிருக்கிறார். இதில் சல்மான்கானும், கத்ரீனாவும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப்படத்திற்கு சல்மானும், கத்ரீனாவும் தான் சரியான ஜோடியாக இருக்கும் என்றும், இருவரும் இதில் நடிக்க ஆர்வம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இந்தப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது.