பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இதுநாள் வரை உள்ளூர் ஜோடிகளுடன் மட்டுமே ஜோடி சேர்ந்து நடித்து வந்த துல்கர் சல்மானுடன் முதன்முறையாக பாலிவுட் நடிகையான ரஷிகா டுகால் இணைந்து நடித்துள்ளார். ராஜீவ் ரவி இயக்கத்தில் துல்கர் நடித்துள்ள 'கமிட்டி பாடம்' என்கிற படத்திற்காகத்தான் இவர்கள் ஜோடி சேர்ந்துள்ளனர். நேற்று வெளியான இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கட்டை மீசையுடன் காட்சியளிக்கும் துல்கரை பார்க்கவே வித்தியாசமாக காட்சியளிக்கிறார். அதுசரி.. ரஷிகா டுகால் எப்படி இந்தப்படத்திற்குள் வந்தார் என்றால் அதுவே பலவருட கதை என்கிறார் ரஷிகா.
பிலிம் இன்ஸ்டிடியூட்டில் ரஷிகா படித்துவந்தபோது சீனியரான ராஜீவ் ரவி ரஷிகாவின் பேட்ஜுக்கு பாடம் எடுப்பது வழக்கமாம். அப்போதே அவரது ஒளிப்பதிவு ஆளுமை மீது மதிப்பு வைத்திருந்த ரஷிகாவுக்கு, அடுத்ததாக அனுராக் காஷ்யப் இயக்கிய படத்தில் நடித்தபோது ராஜீவ் ரவியின் ஒளிப்பதிவில் பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்ததாம்.. அப்போதே, தான் படம் இயக்கும்போது அதில் பொருத்தமான ரோல் இருந்தால் தருவதாக சொல்லியிருந்தாராம் ராஜீவ் ரவி. இதோ இப்போது 'கமிட்டி பாடம்' படத்தில் அப்படி ஒரு கேரக்டர் இருக்கவே ரஷிகாவை அழைத்து வாய்ப்பு கொடுத்தாராம் ராஜீவ் ரவி.