ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் கபாலி. இந்த படத்தை வி கிரியேசன்ஸ் சார்பாக எஸ்.தாணு தயாரித்துள்ளார். ராதிகா ஆப்தே, தன்ஷிகா, தினேஷ், கலையரசன், ரித்விகா உள்பட பலர் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிகட்ட பணிகள் நடக்கிறது. மேலும், கபாலி படம் ஜூன் மாதம் திரைக்கு வரும் என்பதை பத்மவிபூசன் விருது வாங்குவதற்காக டில்லி சென்றபோது விமான நிலையத்தில் பேட்டியின்போது தெரிவித்தார் ரஜினி.
இந்நிலையில், கபாலி படத்தின் ஆடியோ வெளியீடு அடுத்த மாதம் நடக்கயிருப்பதாக கபாலி பட வட்டாரம் தெரிவிக்கிறது. ஆனால் அந்த விழா சென்னை யில் நடக்கவில்லையாம், மலேசியாவில் நடைபெற இருப்பதாக தகவல் வௌியாகியிருக்கிறது. கபாலி படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு மலேசியாவில் நடத்தப்பட்டதோடு, அங்கும் ரஜினிக்கு தமிழகத்தைப்போலவே அதிகப்படியான ரசிகர்கள் இருப்பதால், அங்கு கபாலி ஆடியோ விழாவை பிரம்மாண்டமாக நடத்துவதோடு, அதிக தியேட்டர்களில் கபாலியை வெளியிடவும் திட்டமிடப்பட்டிருக்கிறதாம் தயாரிப்பு தரப்பு.