தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் சினிமாவில் நடிகர்சங்க தேர்தல் நடைபெற்றபோது, தீவிர பிரச்சாரத்திலும் தேர்தல் தொடர்பான வேலைகளிலும் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டே 'கதகளி' என்கிற படத்திலும் விஷால் நடித்து முடித்தாரே.. ஞாபகம் இருக்கிறதா..? இப்போது அதே ரூட்டில் தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தும் பயணிக்கிறார்.. விஷாலாவது நடிகர் சங்க தேர்தலில் தான் போட்டியிட்டார்... ஆனால் ஸ்ரீசாந்துக்கோ இது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சட்டமன்ற தேர்தல்.. ஆம்.. நடைபெறவுள்ள கேரள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார் ஸ்ரீசாந்த். இந்த நெருக்கடியான நேரத்திலும் தான் ஹீரோவாக மலையாளத்தில் அறிமுகமாகும் 'டீம் 5' என்கிற படத்தின் ஷூட்டிங்கிலும் கலந்துகொண்டு நடித்து வருகிறார் என்பதுதான் ஆச்சர்யம்.
சுரேஷ் கோவிந்த் என்பவர் இயக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு கொச்சியில் நடைபெற்று வருகிறது.. தனது முதற்கட்ட பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு படப்பிடிப்புத்தளத்துக்கு ரிலாக்ஸ் பண்ணிக்கொள்வதற்காக, அதாங்க நடிப்பதற்காக வந்துவிட்டார் ஸ்ரீசாந்த். இந்தப்படத்தில் அகில் என்கிற பைக் சாகச வீரராக நடிக்கிறார். கேட்டால் பிரச்சாரம் செய்வதும் படத்தில் நடிப்பதும் ஒன்றையொன்று பாதிக்காது என அவரே முந்திக்கொண்டு சொல்கிறார்.. ஆனால் படக்குழுவில் உள்ள சில சீனியர்களோ இவர் கிரிக்கெட்டை விளையாட்டாக எடுத்துக்கொண்டது போல அரசியலையும் சினிமாவையும் கூட விளையாட்டாக நினைக்கிறாரே, இவர் எந்த ஒன்றிலாவது தேறுவாரா என முணுமுணுத்து வருகிறார்களாம்.