தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சினிமாவில் ஹீரோவாக நடித்து தனக்கென ஒரு இமேஜை ஏற்படுத்தியவர் அரவிந்த்சாமி. ஆனபோதும், பல ஆண்டு இடைவெளிக்குப்பிறகு மணிரத்னம் இயக்கத்தில் நடித்த கடல் படத்தில் பாதிரியாராக நடித்தார். அதன்பிறகு மோகன்ராஜா இயக்கத்தில் ஜெயம்ரவி நடித்த தனி ஒருவன் படத்தில் வில்லனாகி விட்டார். அதுவும் அதிரடி வில்லனாக நடித்தார் அரவிந்த்சாமி. அந்த படத்தில் அவரது நடிப்பு பேசப்பட்டதை அடுத்து அப்படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் வில்லனாக நடித்து வருபவர், தமிழ், தெலுங்கில் தயாராகும் டியர் டாட் என்ற படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், மீண்டும் ஜெயம்ரவி நடிக்கும் போகன் படத்திலும் வில்லனாகியிருக்கிறார் அரவிந்த்சாமி. இந்த படத்தில் இவருக்கு முனிவர் வேடமாம். அதனால் தனது கெட்டப்பை பக்காவாக மாற்றி முனிவராக மாறப்போகிறார் அரவிந்த்சாமி. மேலும் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அந்தமானில் நடைபெற உள்ளதாம். அதற்காக விரைவில் போகன் யூனிட் அந்தமானில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதிக்கு சென்று முகாமிடுகிறது.