'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
கபாலி படத்தில் ரஜினி கேங்ஸ்டராக நடித்திருக்கும் நிலையில், அஜித்தும் தனது 57-வது படத்தில் கேங்ஸ்டர் கதையில் நடிக்கிறார். மேலும் வேதாளம் படம் கோல்கட்டாவில் பெரும்பகுதி நடந்து வந்த நிலையில், இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு ஆஸ்திரேலியாவில்தான் அதிகமாக நடைபெற உள்ளதாம். தற்போது லொகேசன்களை முடிவு செய்து விட்ட டைரக்டர் சிவா, நடிகர்-நடி கையர் தேர்வில் ஈடுபட்டிருக்கிறார்.
அந்த வகையில், இந்த படத்தில் இரண்டு நாயகிகள் இருப்பதாக கூறிவந்தவர், அதில் ஒரு நாயகியாக அனுஷ்காவை ஒப்பந்தம் செய்து விட்டாராம். ஏற்கனவே அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் நடித்துள்ள அனுஷ்கா, முன்பு மாதிரி துண்டு துண்டாக இல்லாமல் மொத்த கால்சீட்டையும் அள்ளிக்கொடுத்து விட்டாராம். இந்த நிலையில், இன்னொரு கதாநாயகியை தேடிவரும் சிவா, தமிழ் நடிகையாக இல்லாமல் பாலிவுட் நடிகையை இறக்குமதி செய்யலாமா என்று யோசித்து வருகிறாராம்.
மேலும், ஏற்கனவே கூறியதைப்போன்று மே 1-ந்தேதி படத்தின் பூஜையை தொடங்கயிருப்பவர்கள், ஜூன் மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் முதல்கட்ட படப்பிடிப்பை தொடங்குகிறார்களாம்.