Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

தேர்தலில் தமிழகத்தை விட கேரளாவில் நட்சத்திரங்களின் போட்டி அதிகம்..!

13 ஏப், 2016 - 16:21 IST
எழுத்தின் அளவு:
kerala-stars-in-election

நம்மில் பலரும் தமிழகத்தில் மட்டும் தான் அரசியலில் சினிமாவின் தாக்கம் அதிகம் என்றும் சினிமாக்காரர்கள் கையில் அரசாங்கம் போய்விட்டது என்றும் சொல்லி வருகிறோம். ஆனால் இதுநாள்வரை கேரளாவில் அரசியல் தனி, சினிமா தனி என்கிற பாணியைத்தான் சினிமாக்காரர்களும் பொதுமக்களும் கூட கடைபிடித்து வந்தார்கள்.. அதேசமயம் இந்தமுறை தமிழ்நாட்டில் உள்ள கட்சிகளின் சார்பாக போட்டியிடும் நட்சத்திரங்கள் யார் என பார்த்தால் ஜெயலிதா, விஜயகாந்த்தை தவிர்த்து, சரத்குமார், சி.ஆர்.சரஸ்வதி என குறைவான சினிமா நட்சத்திரங்களே இருகின்றனர்.

ஆனால் கேரளாவில் மக்கள், சினிமாக்காரர்களை அரசியலில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், அவர்கள் சினிமாவையும் அரசியலையும் வேறுவேறாகத்தான் பார்க்கிறார்கள் என்றுதான் இதுநாள்வரை கருத்து நிலவி வந்தது.. ஆனால் இதுவரை உலா நிலவரப்படி ஐந்து நட்சத்திரங்கள் களத்தில் குதித்துள்ளார்கள்.. ஆறாவதாக இன்னொருவரும் கோதாவில் குதிக்க இருக்கிறார்.. அவர்கள் பற்றிய விபரங்கள் பின்வருமாறு.


கணேஷ் குமார் - பத்தனாபுரம் தொகுதி (காங்கிரஸ்)


ஜெகதீஷ் - பத்தனாபுரம் தொகுதி (கம்யூனிஸ்ட்)


சித்திக் - அரூர் தொகுதி (காங்கிரஸ்)


முகேஷ் - இரவிபுரம் கொல்லம் தொகுதி (காங்கிரஸ்)


கே.பி.ஏ.சி.லலிதா - வடக்கஞ்சேரி தொகுதி (கம்யூனிஸ்ட்)


தேவன் - பிஜேபி..?


அதுமட்டுமல்ல, ஏற்கனவே நடிகர் இன்னொசன்ட் கடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு எம்.பியாக பதவி வகிக்கிறார்.. அடுத்ததாக சுரேஷ்கோபியும் களத்தில் இறங்க இருக்கிறார் என்றாலும் இந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்கிற முடிவில் இருக்கிறாராம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in