ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தலைப்பை பார்த்து விட்டு தவறாக எதுவும் யோசிக்காதீர்கள், சமுத்திரகனி இயக்கி வரும் ''அப்பா'' படத்தை தனுஷ் வாங்கி வெளியிட இருக்கிறார். இயக்குநர், நடிகர் என மாறி மாறி பயணித்து வரும் சமுத்திரகனி, சமீபத்தில் 'விசாரணை' படத்திற்காக தேசிய விருதுக்கு தேர்வாகியிருக்கிறார். ஒருபக்கம் சமுத்திரகனி நடிப்பில் பிஸியாக இருந்தாலும், இயக்கத்திலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். தற்போது இவர் 'அப்பா' என்ற படத்தை இயக்கி வருவதுடன், அதில் முதன்மை நாயகனாகவும் நடிக்கிறார். இன்னொரு முக்கிய ரோலில் தம்பி ராமையா நடிக்கிறார். இளையராஜா இசையமைக்கிறார்.
கல்வி மற்றும் மாணவர்களை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருவதாகவும், இது சாட்டை படத்தின் இரண்டாம் பாகமாக இருக்க கூடும் என்றும் சொல்கிறார்கள். இதனிடையே, சில தினங்களுக்கு முன்னர் சமுத்திரகனியின் 'அப்பா' படத்தை, தனுஷ் பார்த்திருக்கிறார். தனுஷ்க்கு இப்படம் மிகவும் பிடித்து போய்விட்டது. இதனால் 'அப்பா'வை தனது வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தானே ரிலீஸ் செய்ய முடிவெடுத்திருக்கிறார் தனுஷ். இதுப்பற்றிய அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.