ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
''போஸ்டர் மற்றும் முன்னோட்ட காட்சிகள் எனப்படும், 'டீசரை' பார்த்தே, படங்கள் குறித்து விமர்சனம் செய்கின்றனர்,'' என, நடிகர் சந்தானம் ஆதங்கப்பட்டு உள்ளார். 'மாஸ்' ரவி இயக்கிய, ஒரு லைக், ஒரு கமென்ட் என்ற குறும்படத்தை பார்த்த நடிகர் சந்தானம், படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார்.
இதற்கான விழாவில், சந்தானம் பேசியதாவது: 'பேப்பர், ரேடியோ, டிவி' என, இருந்த சினிமா விளம்பரம், 'பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் ஆப்' என, மாறிவிட்டது. 'பேஸ்புக்'கை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள, ஒரு லைக், ஒரு கமென்ட் குறும்படம் சிறப்பாக உள்ளது. இப்போதெல்லாம் படத்தை பார்த்து விமர்சனம் செய்வதை விட, படத்தின், 'போஸ்டர், டீசர்' பார்த்தே விமர்சனம் செய்கின்றனர். இந்த தவறான போக்கு பற்றிய விழிப்புணர்வை, இந்த குறும்படம் ஏற்படுத்துகிறது. இதில், இன்றைய சினிமாவுக்கு தேவையான கருத்து இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.