பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
அல்லு அர்ஜுன் நடிக்கும் சரைனொடு புரமோஷன் நிகழ்ச்சி நேற்று விசாகபட்டிணத்தில் நடைபெற்றது. இசையமைப்பாளர் தமன் இசையில் ஏப்ரல் 1 ஆம் தேதி இப்படத்தின் பாடல்கள் இணையத்தில் வெளிவந்தன. நேற்று இப்படத்தின் நடைபெற்ற ஆடியோ சக்கஸ் மீட் நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் மெகா ஸ்டார் சிரஞ்சீவியும் கலந்து கொண்டார். இப்படத்தின் டிரைலரும் நேற்றைய நிகழ்வில் வெளியிடபட்டது.
விழாவில் கலந்து கொண்ட சிரஞ்சீவி கூறுகையில், இவ்விழாவிற்கு நான் வர இரண்டு காரணம். ஒன்று கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் மற்றொன்று விசாகபட்டிணம். விசாகபட்டிணத்தில் எனது பல வெற்றிப் படங்களின் பாடல்கள் படமாக்கப்பட்டுள்ளன. எனது திரை உலக ஓய்விற்கு பின்னர் இங்கே நிரந்தரமாக தங்க விரும்புகிறேன் என்று கூறினார்.
மேலும் தெலுங்கு மற்றும் தமிழில் கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்தார் வெற்றி படங்களை கொடுத்து வருகின்றனர். அல்லு அர்ஜுனுக்கு ஆந்திராவைப் போல் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகத்திலும் ரசிகர்கள் உள்ளனர். இப்படத்தில் அல்லு அர்ஜுனின் மாஸ் அவதாரத்தைப் பார்ப்பதற்கு ஆவலுடன் காத்திருக்கின்றேன் என்றும் கூறினார்.
இயக்குனர் பொய்யபடி ஸ்ரீனு இயக்கியுள்ள இப்படத்தில் ராகுல் ப்ரீத்தி சிங், கேத்ரின் திரைஷா, ஆதி, ஸ்ரீகாந்த மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 22 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.