மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ராஜமௌளி இயக்கிய மகதீரா படமே நடிகை காஜல் அகர்வாலுக்கு திரை உலக வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தியது. அப்படம் போல் மீண்டும் ஒரு வரலாற்று படத்தில் நடிக்க காஜலுக்கு அழைப்பு வந்துள்ளதாம். கஞ்சே படப்புகழ் இயக்குனர் க்ரிஷ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் சரித்திர படத்தில் பாலகிருஷ்ணா அமராவதி மன்னனாக நடிக்கின்றார்.
இப்படத்தில் பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலிடம் பேச்சு வார்த்தை நடைபெறுகின்றதாம். இப்படத்திற்கு கௌதமிபுத்ர சாதகர்னி என பெயரிட்டுள்ளனர். பாலகிருஷ்ணாவின் 100வது படமான இப்படத்திற்காக பொதுவாக படப்பிடிப்பிற்கு பயன்படுத்தும் கவரிங் நகைகள் அல்லாது உண்மையான தங்க வைர நகைகளை ஆடை அலங்கார நிபுணர்கள் தேர்வு செய்து வருகின்றனராம்.
அனுஷ்கா நடிப்பில் வெளியான ருத்ரமாதேவி படத்தில் அனுஷ்கா தங்க வைர நகைகளையே பயன்படுத்தினார். அதேபோல் தற்போது பாலகிருஷ்ணாவும் கவரிங் அல்லாத நகைகளை பயன்படுத்த உள்ளார். இதனால் படப்பிடிப்பு தளத்தில் வழக்கத்தை விட கூடுதல் பாதுகாப்பு இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.