'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஆஷிக், ஆஷிக்-2 படங்களின் வெற்றியை தொடர்ந்து ஆஷிக்-3 உருவாக இருக்கிறது. இதில் சித்தார்த் மல்கோத்ரா நடிக்க இப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் இப்போது அவர் நடிப்பது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து சித்தார்த் மல்கோத்ரா கூறியிருப்பதாவது....
''ஆஷிக்-3யின் கதையை படித்து வருகிறேன். விரைவில் படப்பிடிப்புகள் ஆரம்பமாக இருக்கிறது, அடுத்தாண்டு படம் வெளியாகும். ஆஷிக்-2 படத்தில் காதலை விட பாடல்கள் தான் பெரிதும் பேசப்பட்டன. ஆஷிக்-3யில் அதைவிட பெரிதாக எதிர்பார்க்கிறேன். மேலும் இப்படத்தில் சித்தார்த் மல்கோத்ரா ஒரு பாட்டு பாட இருப்பதாக கூறப்படுகிறது. இதுப்பற்றி சித்தார்த் கூறும்போது, இயக்குநர் மொகித் சூரி இந்தப்படத்தில் ஒரு பாட்டு பாட வேண்டும் என்று கேட்டு கொண்டார், ஆகையால் நான் என் குரலில் பாட தயாராகி வருகிறேன் என்று கூறியுள்ளார்.