இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இந்திய அளவில், தன் கவர்ச்சியால், இளவட்ட ரசிகர்களை கிறங்கடித்து வருபவர் சன்னி லியோன். அதேபோல், சில ஆண்டுகளுக்கு முன்வரை, மலையாள கவர்ச்சி படங்களில் நடித்து வந்தவர் ஷகிலா. ஆனால், இப்போது அவர் கதாபாத்திர நடிகையாகி விட்டார். இந்நிலையில், ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி, தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ஒரு படம் தயாராக உள்ளது. இப்படத்தில் நடிக்க, சன்னி லியோனை கேட்டதும், உடனே சம்மதம் சொல்லி விட்டார். மேலும், சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவான, த தர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் நடித்த வித்யாபாலனுக்கு தேசிய விருது கிடைத்ததால், சன்னி லியோனுக்கும் அப்படியொரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
— எலீசா