இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
'கத்திரி' வெயில் இன்னும் ஆரம்பமாகாத நிலையிலேயே கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதும் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அடுத்த இரண்டு மாதங்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். ஒரு பக்கம் கோடை வெயில் மக்களை எந்த அளவிற்கு பாதிக்கப் போகிறதோ அதே அளவிற்கு திரையுலகத்தையும் பாதிக்க வாய்ப்புள்ளது.
ஒரு பக்கம் பெரிய திரைப்படங்களின் வருகை, மற்றொரு பக்கம் ஐபிஎல் விளையாட்டுப் போட்டிகள், இன்னொரு பக்கம் சட்டமன்றத் தேர்தல் என அடுத்த இரண்டு மாதங்களுக்கு தமிழ்த் திரையுலகம் தவிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
அடுத்த வாரம் 'தெறி', அடுத்த மாதம் '24', அதற்கடுத்து 'கபாலி' என மிகப் பிரம்மமாண்டமாகத் தயாராகியுள்ள பெரிய நட்சத்திரங்களின் படங்கள் சிறிய பட்ஜெட் படங்களுக்கு சவாலாக இருக்கப் போகின்றன. நாளை ஏப்ரல் 9ம் தேதி ஆரம்பமாகப் போகும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மே 29ம் தேதி வரை நடைபெற உள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் ஒவ்வொரு கட்சியாக அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் திரைப்படங்களின் போஸ்டர்களை ஒட்டுவதற்கு சுவர்கள் கிடைக்காமல் தியேட்டர்காரர்கள் தவிக்க வேண்டிய நிலையும் ஏற்படப் போகிறது. இத்தனை விஷயங்களையும் கடந்து வெளிவரும் படங்கள் ரசிகர்களை எப்படி கவரப் போகின்றன என்பதை திரையுலகத்தினரே சந்தேகத்துடன் பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.