ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
கரண் ஜோகர் இயக்கிய ஸ்டூடண்ட் ஆப் தி இயர் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர்கள் சித்தார்த் மல்கோத்ராவும், ஆலியாபட்டும். அப்போதிருந்தே இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்து வருகிறது. தற்போது இவர்களுக்கு இடையே நட்பையும் தாண்டி ஒரு உறவு ஏற்பட்டிருப்பதாக, அதாவது இருவரும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் இதுப்பற்றி இருவரும் வாய்திறக்கவேயில்லை.
இந்நிலையில், சமீபத்தில் சித்தார்த் அளித்த பேட்டி ஒன்றில் ஆலியா பற்றி புகழ்ந்துள்ளார். குறிப்பாக தனது அம்மா, ஆலியாவை பாராட்டியதாக குறிப்பிட்டிருக்கிறார். சித்தார்த் கூறியிருப்பதாவது... ஆலியா அழகான, அருமையான, திறமையான நல்ல நடிகை என்று என் அம்மா அடிக்கடி கூறுவார், அவருடைய நடிப்பை ரசிப்பார். ஸ்டூடண்ட் ஆப் தி இயர் படத்தில் தான் என் அம்மாவுக்கும், ஆலியாவுக்கும் அறிமுகம் கிடைத்தது, என்னுடைய எல்லா படங்களின் திரையிடலின் போது ஆலியா கண்டிப்பா வருவார். அதோடு மட்டுமல்ல என் வீட்டிற்கும் வந்துள்ளார் என்று கூறியுள்ளார்.