பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சமீபத்தில் வெளியான படங்களிலேயே பெரிய அளவில் வசூல்வ செய்து வெற்றியடைந்த படம் ஒன்றிரண்டு படங்கள்தான். அவற்றில் ஒன்று.... விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்த பிச்சைக்காரன் படம். படம் வெளியாகி அனைத்து சென்டர்களிலும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிய பிச்சைக்காரன் படத்தின் வெற்றிக்கு ஆண்கள் கூட்டம் அடிலமோதியதே காரணம் என்கின்றனர் தியேட்டர்காரர்கள்.
வழக்கமாக பெண்கள் கூட்டம் அதிகமாக வந்தால்தான் படம் வெற்றியடையும் என்று சொல்வார்கள். அதற்கு மாறாக முதன்முறையாக ஆண்களின் கூட்டத்தினால் வெற்றியடைந்த படம் பிச்சைக்காரன் படம்தான் என்று சொல்லப்படுகிறது. அம்மா சென்ட்டிமெண்ட் கதை என்பதால் ஆண்களுக்குப் பிடித்தமான படமாக இருந்திருக்கிறது பிச்சைக்காரன்.
இந்தப் படம் பற்றி இன்னொரு தகவல்.... பிச்சைக்காரன் படத்தை தெலுங்கில் மட்டும் டப் செய்து வெளியிட்டார் விஜய் ஆண்டனி. பிச்சைக்காரன் படம் வெற்றியடைந்த சில வாரங்களில் மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஒரியா, போஜ்பூரி, பெங்காலி என அனைத்து மொழிகளின் ரீமேக் ரைட்ஸும் நல்ல விலைக்கு விற்கப்பட்டிருக்கிறது. சமீப ஆண்டுகளில் இத்தனை மொழிகளில் ரீமேக் ரைட்ஸ் விலைபோன படம் பிச்சைக்காரன்தான் என்கிறார்கள்.