பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாலிவுட்டின் முன்னணி நடிகையான கரீனா கபூர், நடிகர் சைப் அலிகானை கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் கி அண்ட் கா படம் வெளியானது. இப்படத்தில் அவரது நடிப்பு பாராட்டப்பட்டு வருகிறது. தொடர்ந்து சில படங்களில் நடிக்க பேசி வருகிறார் கரீனா.
இந்நிலையில் நடிகை கரீனா கபூர் கர்ப்பமாக இருப்பதாகவும், இதுதொடர்பாக அவர் மகப்பேறு மருத்துவரை சந்தித்து தனது கருமுட்டையை பாதுகாக்க சொல்லியதாகவும் செய்தி வெளியானது. ஆனால் இதை கரீனா கபூர் மறுத்துள்ளார்.
இதுகுறித்து கரீனா கூறியுள்ளதாவது... எங்கிருந்து இது போன்று வதந்தி கிளம்புகிறது என்று தெரியவில்லை. நான் கர்ப்பமாக இல்லை, இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு குழந்தை பற்றி யோசிக்கவேயில்லை. எனக்கு எப்போது குழந்தை வேண்டும் என்று எனக்கு தெரியும். நான் எங்கேயும் போகவில்லை, நான் கர்ப்பம் அடைந்தால் சொல்வேன் என்று கூறியுள்ளார்.