பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஸ்டுடியோக்ரீன் பட நிறுவனத்தின் முதல் தயாரிப்பு 'சில்லுனு ஒரு காதல்'. இது நடிகர் சூர்யாவின் படம் என்பதால் அத்தனை பிசியிலும் 'சில்லுனு ஒரு காதல்' படத்துக்கு இசையமைத்துக் கொடுத்தார் ஏ.ஆர்.ரஹ்மான். அவரது இசை படத்திற்கு மிகப்பெரிய ஓபனிங்கைக் கொடுத்தும், 'சில்லுனு ஒரு காதல்' படம் பெரியளவில் வெற்றியடையவில்லை என்றாலும், பாடல்களுக்காகவே பெரிதும் பேசப்பட்ட படம் 'சில்லுனு ஒரு காதல்'.
கிட்டத்தட்ட 10 வருடங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் சூர்யா நடித்த '24' படத்திற்கு இசையமைத்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். இதுவும் சூர்யாவின் சொந்தப்படம்தான். 10 வருடங்களுக்குப் பிறகு இக்கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதாலோ என்னவோ '24' படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே இந்த ஆல்பத்தில் இடம்பெற்றுள்ள 'காலம் என் காதலி' என்ற பாடலின் சிங்கிள் டிராக் வெளிவந்து ஓரளவு வெற்றிபெற்றுள்ளது.
இந்நிலையில், வரும் 11ஆம் தேதி 24 படத்தின் பாடல்கள் வெளியாக உள்ளன. அதற்கு முன்னதாகவே 24 பட ஆல்பத்தில் இடம்பெற்றிருக்கும் மற்ற பாடல்களின் விவரங்களும் தெரியவந்துள்ளன. மொத்தம் 6 பாடல்கள் இடம்பெற்றுள்ள '24' ஆல்பத்தில் வைரமுத்துவும், அவரது மகனான மதன் கார்க்கியும் தலா 3 பாடல்களை எழுதியுள்ளனர்.
1. நான் உன்...
பாடியவர்கள் : அர்ஜித் சிங், சின்மயி
பாடலாசிரியர் : மதன் கார்க்கி
2. மெய் நிகர...
பாடியவர்கள் : சித் ஸ்ரீராம், சனா மொய்தத்தி, ஜோனிதா காந்தி
பாடலாசிரியர் : மதன் கார்க்கி
3. புன்னகையே...
பாடியவர்கள் : ஹரிச்சரண், ஷாஷா திருப்பதி
பாடலாசிரியர் : வைரமுத்து
4. ஆராரோ...
பாடியவர் : சக்திஸ்ரீ கோபாலன்
பாடலாசிரியர் : மதன் கார்க்கி
5. மை ட்வின் பிரதர்...
பாடியவர்கள் : ஸ்ரீனிவாஸ் கிருஷ்ணன், ஹ்ருதய் கட்டானி
6. காலம் என் காதலி...
பாடியவர்கள் : பென்னி தயாள், ஷாஷ்வத் சிங், அபய் ஜோத்புர்கர்
பாடலாசிரியர் : வைரமுத்து