தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஜய் நடித்துள்ள 'தெறி' படம் அடுத்த வாரம் 14ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. விஜய் நடித்து வெளிவந்த படங்களிலேயே இந்தப் படம் இதுவரை இல்லாத அளவிற்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு உரிமை மட்டும் மொத்தமாக 50 கோடி ரூபாய் வரை விற்கப்பட்டிருக்கலாம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏரியா உரிமை 50 கோடி, அதற்கு மேல் படத்திற்கான விளம்பர செலவுகள், இதர செலவுகள் என அவையும் சில கோடிகளைத் தாண்டும். அப்படியென்றால் அந்தப் பணம் அனைத்தையும் மொத்தமாக வசூலிக்க எத்தனை நாட்கள் தேவைப்படும் என்ற ஒரு கணக்கை இப்போதே வினியோக வட்டாரங்கள் ஆரம்பித்துவிட்டன.
'கத்தி' படத்தின் முதல் நாள் வசூல் சுமார் 12 கோடி ரூபாய் வரை இருந்தது. மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் தவிர மற்ற திரையரங்குகளில் குறைந்தபட்ச கட்டணமாக 200 ரூபாய் வரை இருந்தது. ஆனால், 'கத்தி' படத்தின் வியாபாரத்தை விட 'தெறி' படத்தின் வியாபாரம் அதிகமாக நடந்திருக்கிறது. அதனால், இதற்கான டிக்கெட் கட்டணமும் அதிகமாக இருந்தால்தான் போட்ட முதலீட்டை எடுக்க முடியும் என்கிறார்கள். குறைந்த பட்சம் 500 ரூபாயாவது டிக்கட் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டால்தான் அசலை எடுக்க முடியும் என்ற நிலை உள்ளது.
அதே சமயம், படம் நன்றாக இருந்தால் தியேட்டர்காரர்கள் மேலும் லாபத்தை அள்ளத்தான் பார்ப்பார்கள். அதனால், சில நாட்களுக்கு அந்தக் கட்டணத்தையும் குறைக்க மாட்டார்கள். எனவே, அரசாங்கம் இப்போதே தலையிட்டு டிக்கெட் கட்டண நிர்ணயத்தைக் கண்காணிக்க வேண்டும் என்ற குரல் ரசிகர்கள் மத்தியிலேயே எழுந்துள்ளது. இது தேர்தல் நேரம் என்பதால் இதையெல்லாம் கவனிப்பார்களா என்பது சந்தேகம்தான். 'தெறி'யை வைத்து ஒரு மிகப் பெரிய வசூல் அறுவடைக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.