இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இயக்குநர், நடிகர் என மாறி மாறி பயணித்து வரும் சமுத்திரகனி, இயக்கத்தை விட நடிப்பில் தான் அதிக கவனம் செலுத்துகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 'விசாரணை' படத்திற்காக இவருக்கு தேசிய விருது கிடைத்தது. இந்நிலையில், இவர் மலையாள படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.
மலையாளத்தில் மஞ்சுவாரியரும், அனூப்மேனன் இணைந்து 'கரின்குண்ணம் சிக்ஸ்' என்ற படத்தில் நடித்து வருகின்றனர். இதில் சிறை கைதிகளுக்கு வாலிபால் பயிற்சி அளிக்கும் பயிற்சியாளராக மஞ்சுவாரியர் நடிக்க, அவரின் கணவராக அனூப் மேனன் நடிக்கிறார். இந்தப்படத்தில் இன்னொரு முக்கியமான ரோலில் சமுத்திரகனி நடிக்க இருக்கிறார். சமுத்திரகனி சம்பந்தப்பட்ட காட்சிகளுடன் இப்படம் முடிவடைய இருக்கிறது.
முன்னதாக இப்படத்தில் தனுஷ் நடிப்பதாக இருந்தது. ஏற்கனவே தனுஷ், மம்முட்டி - திலீப் நடித்த 'காமத் அண்ட் காமத்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்ததால் அதை மனதில் கொண்டு அவரிடம் இந்தப்படத்தில் நடிக்க கேட்டுள்ளனர். ஆனால் தனுஷ் மறுத்துவிட்டார். இதையடுத்து சமுத்திரகனியிடம் பேசி அவர் சம்மதம் சொல்ல, இப்போது படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார்.
மோகன்லாலின் ஒப்பம் என்ற படத்திலும் சமுத்திகரனி வில்லனாக நடித்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.