ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மணிரத்னத்தின் ‛‛கடல்'' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் கார்த்திக் முத்துராமனின் வாரிசு கவுதம் கார்த்திக். முதல்படமே பெரிய இயக்குநர் எனும் அடையாளத்தோடு அறிமுகமானார். ஆனால் அந்தப்படம் தோல்வியை தழுவியது. தொடர்ந்து என்னமோ ஏதோ, வை ராஜா வை போன்ற படங்களில் நடித்தார். இந்த படங்களும் அவருக்கு வெற்றி கொடுக்கவில்லை. தற்போது இந்திரஜித், ரங்கூன், சிப்பாய், முத்துராமலிங்கம் படங்களில் நடித்து வருபவர், அடுத்தப்படியாக இன்னொரு புதிய படத்திலும் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
சென்னையில் சட்டத்திற்கு புறம்பாக பைக் ரேஸ்கள் நடப்பது பிரபலம். இதை வைத்து சூதாட்டம் கூட ஆடுவார்கள். இதை மையப்படுத்தி புதியவர் பாலா என்பவர் ஒரு படம் இயக்குகிறார். இதில் கவுதம் கார்த்திக் பைக் ரேஸராக நடிக்கிறார். படத்திற்கு ''46'' என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். விரைவில் இந்தப்படம் ஆரம்பமாக இருக்கிறது.
இத்தாலியை சேர்ந்த பிரபல பைக் ரேஸர் வேலன்டினோ ரோஸியின் பைக் எண் '46', அதன் அடிப்படையில் இப்படத்திற்கு ''46'' என்று தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.